இலங்கை

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய கொள்கைத் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பொலனறுவை பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ‘எலிய’ என்ற அரசியல் நிகழ்சியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை கட்டியெழுப்பும் வகையிலான பொருளாதார திட்டங்கள் கிடையாது. நாங்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை கட்டியெழுப்பினோம். பொருளாதாரத்தில் சிறந்த நிலைமையிலேயே நாட்டை வைத்திருந்தோம். ஆனால் தற்போதை அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளன. நாட்டை கட்டியெழுப்பும் பொருளாதார திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன.” என்றுள்ளார்.