இலங்கை

சட்டச் சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதனால், இந்த நிலைமை உருவாகி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மல்வத்துபீட மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு ஒன்று எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் 3 கட்ட நடவடிக்கையாக , ஜூன் 6 ந்தி முதல் பல்வேறு விடயங்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.