இலங்கை

இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பிய பின்னர் இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ரவிநாத ஆரியசிங்க செயற்படுகின்றார். அவர், வெளிவிவகார செயலாளராக நியமிக்கப்படும் பட்சத்தில், தற்போது வெளிவிவகாரச் செயலாளராக பதவி வகிக்கும் பிரசாத் காரியவசம் மீண்டும் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.