இலங்கை

“அரசியல் கைதிகள் விடயத்தில், பாராளுமன்றத்திலுள்ள அனைத்துத் தமிழ் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே சரியான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.” என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தம் நிறைவடைந்த பின்பு பல பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினையாக இருப்பது இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினை. உண்மையிலேயே இந்தப் பிரச்சினை வடக்கு கிழக்குக்கு மாத்திரம் உரித்தானதல்ல. இதில் மலையகத்தைச் சார்ந்த எங்களுடைய மக்களும் இருக்கின்றார்கள். எனவே, இதற்காக போராட்டம் செய்வதோ அல்லது வேறு வகையில் போராடுவதோ அவை அனைத்தும் உணர்வு பூர்வமான ஒரு விடயமாகவே நான் அதனை கருதுகின்றேன். அதன் மூலமாக அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க முடியுமா? என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இவர்களுக்கு உண்மையிலேயே விடுதலை கிடைக்க வேண்டுமானால் அவர்களுடைய பிரச்சினையை சட்ட ரீதியாக அணுக வேண்டும். அண்மையில் இந்தக் கருத்தை நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவும் தெரிவித்திருந்தார். அப்படியானால் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்துத் தமிழ் உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோருக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

இது தொடர்பாக சட்ட மாஅதிபருடன் நாம் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். அப்படி செய்வோமானால் நிச்சயமாக இதற்கான ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும்.

இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஒன்றுபடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கான முன்னெடுப்புகளை யார் எடுத்தாலும் அவர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தனது முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருக்கின்றது.

கடந்த வாரம் நாம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கியிருந்தார்.

எனவே, நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் பல வெற்றிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.அதே நேரத்தில் உங்களுடைய உணர்ச்சிபூர்வமான போராட்டத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அத்தோடு சட்ட ரீதியாகவும் இதனை அணுகினால் இன்னும் விரைவாக தீர்வு காண முடியும் என்பதே எனது கருத்தாகும்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.