இலங்கை

‘எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள். இதில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டாம்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபை அமர்வில் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73வது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் ஆரம்பமானது.

முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.

இந்த பிரதான அமர்வில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அரச தலைவர்களுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்துகொண்டுள்ளார். இலங்கைத் தூதுக்குழுவில் அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலக் மாரப்பன, ராஜித சேனாரத்ன, மனோ கணேசன் ஆகியோரும் இந்த அமர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

அங்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “இலங்கை இறைமையுள்ள ஒரு நாடாகும். அதனால் சர்வதேச தலையீடுகளுக்கு அவசியம் இல்லை. தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையை வழங்க ஒத்துழைப்பு வழங்குங்கள். அத்துடன் இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம், தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.