இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ அவசரமாக நேற்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அவசர அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் இரண்டு மாத கால விடுமுறையை கழித்ததன் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை வருவதற்காக பஷில் ராஜபக்ஷ பயணச்சீட்டினை ஏற்பாடு செய்திருந்திருந்தார்.

எனினும், தென்னிலங்கை அரசியல் களம் சூடுபிடித்திருப்பதன் காரணமாக கூட்டு எதிரணியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பின் நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கான தேவைகள் ஏற்பட்டிருப்பதனால், தாமதிக்காமல் உடனடியாக நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பஷில் ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.