இலங்கை

நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்கினால், நாளையே ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“மரணப் பயத்தை ஏற்படுத்தி நான் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதை எவராவது தடுக்க நினைப்பார்களாயின் அது தவறானது. எனது பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.