இலங்கை

“வடக்கு- கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்ந்தால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று கூறப்படுவது தவறானது. அப்படி வழங்கினால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கும்.” என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் தான், அபிவிருத்தியைக் கொண்டுவர முடியும் என்பதுவும் தவறான கருத்தாகும். பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அரசியலமைப்பின் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக, மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே, அரசியலமைப்பின் 20வது திருத்தம் குறித்து கேள்வியெழுப்பிய போதே பட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "20வது திருத்தம், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு, வெளிப்படையாகவே பாதிப்பானது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால், வட்டார அடிப்படையிலான, பழைய தேர்தல் முறைமை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நாட்டை ஸ்திரமற்றதாக ஆக்குவதற்கு, எவ்வித வாய்ப்புகளையும் வழங்கக்கூடாது. இதேவேளை, அரசியலமைப்பின் 19வது திருத்தம் மூலமாக, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியுள்ளோம். இதற்குப் பின்னும் பறிப்பதற்கான அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் காணப்படவில்லை.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.