இலங்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எந்தவொரு காரணம் கொண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர அனுமதிக்க முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது ரூபாயின் பெறுமதி மிக வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இவை அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.

20வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு வேடிக்கையானது. ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது. அவருக்கு ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது. ரணில் விக்ரமசிங்கவை சுற்றி இருக்கும் ஆலோசகர்கள் என்ன கூறினாலும், அவருக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.