இலங்கை
Typography

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அக்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

கட்சியின் மாநாடு இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் எனவும் இதன்போதே, மஹிந்த ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்கும்படி கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியிலிருந்து போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்றால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிப் பறிப்போகுமா என வினவப்பட்டமைக்கு, அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது. அவ்வாறான பிரச்சினைகளை எவராவது ஏற்படுத்த முயற்சித்தால், அதற்கு முகங்கொடுக்கத் தயார் எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்