இலங்கை
Typography

“யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லை. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதை ஏற்க முடியாது” என்று இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “வடக்கில் யுத்தம் நிறைவடைந்து மக்கள் சுமூகமாக வாழ ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆனால், நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மாவீரர் தினமோ அல்லது பிறிதொரு தினமோ நடத்தப்படுமானால், அவ்விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக அஞ்சலி செலுத்தப்படுமானால், நாட்டில் தமிழ்- சிங்கள மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சிக்கலை தோற்றுவிக்கும்.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்