இலங்கை
Typography

இலவச கல்வியின் நன்மையை பெற்றுக்கொண்ட அனைவரும் தாய் நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“நாட்டின் எதிர்காலம் கல்வி கற்ற எதிர்கால தலைமுறையின் கைகளிலேயே தங்கியுள்ளது. இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு கடந்த மூன்றரை வருட காலமாக அரசாங்கம் பல்வேறு முக்கிய நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கை மாணவிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“எமது தாய் நாடு உலகின் பாராட்டை பெறும் விடயங்களுள் முக்கிய இடத்தை வகிப்பது இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையுமாகும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்