இலங்கை
Typography

‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அரசியல் செய்வதை கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டேன்’ என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அன்று தொடக்கம் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர தோழனும் இல்லை என்று தெரிவித்தாலும், ராஜபக்ஷக்களின் ஊழல் அரசியலுடன் இணைந்து நான் செயற்படப் போவதில்லை.

நான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு, போதை வர்த்தகர்கள், குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தேன். அப்போது அதனை எவரும் கவனத்திற்கொள்ளாவிட்டாலும், இன்று அவை உண்மையாகி வருகின்றன.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS