இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மக்களுக்குப் பெற்றுக்கொடுத்த ஜனநாயக உரிமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பறித்திருப்பதாக பொது ஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டினார். 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுப்பதையே கடமையாகச் செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொது ஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கோரியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்குக் கேட்டனர். எனினும், மேலதிக அதிகாரங்கள் எதுவும் பெறாமலே வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடையவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதியுடன் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதன் பின்னர் எதுவும் இல்லாமல் போகிறது.

சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் வடக்கு மாகாண சபைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தேர்தலை நடத்தினார். வடக்கு மாகாண சபைத் தேர்தல் மத்திய அரசுக்கு சாதகமாக இருக்காது என அரசாங்கத்தில் இருந்த பலரும் எச்சரித்தபோதும் மஹிந்த ராஜபக்ஷ அங்கு தேர்தலை நடத்தினார். வடக்கு மக்களுக்கு அவர் பெற்றுக் கொடுத்த ஜனநாயக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்பொழுது பறித்துவிட்டனர். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்கும் சட்டத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது மக்களின் ஜனநாயக உரிமையைப் பறித்துள்ளது.” என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.