இலங்கை

“அரச பயங்கரவாதம், அரச வன்முறை ஆகியவற்றை தோற்கடித்து 2015 ஜனவரி 08ஆம் திகதி பெற்றுக்கொண்ட மாபெரும் மக்கள் ஆணையை, ஒரு சதத்துக்கும் பெறுமதியற்ற இடைக்கால அரசுக்காக விற்க முடியாது.” என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

“மக்கள் ஆணையை மீறி இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இணங்க மாட்டார். நாட்டு மக்களை மறந்து துப்பாக்கிகள் மூலமும் ஆயுதங்கள் மூலமும் குரோதத்துடன் அவர்களை நடத்திய யுகத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தேவை தோல்வியுற்ற குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களின் கூற்றுக்களை ஜனாதிபதி செவிமடுத்தாலும் அவர்களின் நோக்கம் நாட்டை கட்டியெழுப்புவதில்லை. ஹிட்லர் ஆட்சி, அரச பயங்கரவாதம் ஆட்சிசெய்யும் யுகத்தை மீண்டும் நாட்டில் கொண்டுவருவதற்கு அவர்கள் முயல்கின்றனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மோசமான பயங்கரவாதத்தை தோற்கடித்து நீதியை வென்றெடுத்துள்ள நாடு இலங்கை மட்டுமே. 30 வருட காலமாக பயங்கரவாதத்தினால் நாடு முழுமையாக அழிவுற்றது. அதேபோன்று ஏகாதிபத்தியவாதம், அரச பயங்கரவாதம், அரச வன்முறை போன்றவற்றை மக்கள் வாக்கு மூலம் தோல்வியுறச்செய்த நாடும் எமது நாடே. பயங்கரவாதத்தை தோற்கடித்து மறுபுறம் மக்கள் சக்தியுடன் நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக இருந்துகொண்டு கட்சிக்கு முன் நாட்டைப் பற்றி சிந்தித்தார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பெருமளவு நேசித்தவர். எனினும் அதற்கு மேலாக நாட்டை நேசித்தார்.

நாட்டில் இடம்பெற்ற மோசமான அழிவைக் கண்டு நாட்டின் மீதுள்ள அக்கறையினால் அப்பதவியிலிருந்து விலகி பொது வேட்பாளராக மாபெரும் சவாலை ஏற்றுக்கொண்டார்.

நாட்டை வெற்றிகொண்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர் கண்டார். தேர்தலில் தான் பின்னடைவு கண்டால் ஆறடி நிலமே தமக்குச் சொந்தமாகும் என்பதை தெரிந்துகொண்டும் அவர் நாட்டுக்காக சவாலை பாரமெடுத்தார்.

இன, மத பேதங்களுக்கப்பால் ஜனநாயகம் ஆட்சிசெலுத்தும் நீதியான சமூகத்திற்கு அவர் தலைமைத்துவம் வழங்கினார். நாம் அவருக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமன்றி நாட்டு மக்கள் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளச் செய்வதற்கு வழிவகுத்த அவருக்கு நாட்டு மக்கள் நன்றியுடையவர்கள். எதிர்காலத்திலும் எதிர்கால பரம்பரையை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் சரியான தீர்மானமொன்றை எடுப்பர் என நான் நம்புகின்றேன்.” என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.