இலங்கை
Typography

கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பஷில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த கருத்துக் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு பதிலளித்தார்.

“இதுவரையில் எந்தவித தீர்மானமும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எடுக்கப்படவில்லை. எமது கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிகின்றன. நேற்றைய தினம் மாத்திரம் மூன்று ராஜபக்ஷாக்கள் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தரவேண்டியிருந்தது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்