இலங்கை
Typography

“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்டகாலம் சிறைகளில் வாடிவிட்டனர். எனவே, குற்றம் புரிந்தார்களோ, புரியவில்லையோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற இழப்பீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதி முறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட வாய்க்கூற்றுகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது. அநீதியான முறையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேசக் கோட்பாடுகளுக்கு முரணான செயலாகும். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கிளர்ச்சியின்போது கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டமை போல் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் இழப்பீடுகள் குறித்த அலுவலகமும் கவனம் செலுத்தவேண்டும்.

அதேவேளை, பயங்கரவாத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலமானது தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது. குற்றம் இழைந்திருந்தாலும், புரிந்திருக்காவிட்டாலும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்