இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்து பேசியுள்ளார். 

அத்துடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகிய பிரதான இரு விடயங்களை முன்னிலைப்படுத்தி கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

மேலும் கூட்டமைப்பு நபர்களை முன்லைப்படுத்தவில்லை என்பதோடு அரசியலமைப்பு மீறப்படாது பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இறுக்கமான நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் மூன்று தரப்பினர்களுடனும் சம்பந்தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தில் நடைபெற்றுள்ள திடீர் மாற்றங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளதாவது,

“நாட்டின் அரசியலில் தற்பொழுது முக்கியமானதொரு கட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாம் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முற்பட்டபோதும் பாராளுமன்ற அமர்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு அடைந்ததால் எமது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டனர். இருப்பினும் நான் அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.

எம்மைப்பொறுத்தவரையில் நாட்டில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் கூடிய கவனத்தினைக் கொண்டுள்ளதோடு சில முக்கிய கருமங்கள் தொடர்பில் நாம் அதீதமாக அக்கைறையையும் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக ஏகமனதான அங்கீகாரத்துடன் மாற்றப்பட்டு தேசிய பிரச்சினை உட்பட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனத்தினை உருவாக்கும் செயற்பாடுகள் பல கட்டங்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின இணை அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆத்தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சில விடயங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மேலும் முன்னேற்றங்கள் அவசியம் என்பதுடன் அந்தக் கருமங்கள் தடையின்றி தொடர்ச்சியாக தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது உறுதியான நிலைப்பாடாகின்றது. ஆகவே இந்த விடயங்களில் முக்கியமான கவனத்தினைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

எம்மைப்பொறுத்தவரையில் நாம் யாரை ஆதரிக்கின்றோம் என்றெல்லாம் நிலைப்பாடெடுக்க தற்போது அவசியம் எற்படவில்லை. நபர்களைப் பற்றிய நாம் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை. மேற்படி கருமங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பது பற்றியே அதிகளவில் கவனத்தினை செலுத்தி ஆராய்ந்து வருகின்றோம். அவ்வாறான நிலையில் இந்த நாட்டில் ஜனநாயத்தினை மீறாது செயற்பட வேண்டும்.

அரசியல் சாசனம் மதிக்கப்பட வேண்டும். அரசியல் சாசனம் பின்பற்றப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. யார் பிரதமர் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினத்தவரின் நம்பிக்கையை, ஆதரவை பெற்றவரே பிரதமராகுவதற்கு தகுதியானவராக உள்ளார்.

ஆகவே ஜனநாயகத்திற்கு மாறாக எந்தவிதமான நடவடிக்கைகள் ஊடாகவும் இந்த விடயத்திற்கு தீர்வினை வழங்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியவர்கள் சார்ந்து எவ்விதமான நிலைப்பாடுகளையும் நாம் எடுக்கவில்லை. என்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :