இலங்கை

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக குறிப்பிடும் விடயம் அரசியலமைப்புக்கு முரணானது. நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கிய மக்களின் ஆணையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாக பயன்படுத்தி விட்டார்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு நிபுணருமான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று குறிப்பிடுபவர்கள், அரசியலமைப்பினை முழுமையாக ஆராயவில்லை என்றே குறிப்பிட வேண்டும். இவ்விடயத்தில் அரசியலமைப்பு அரசியல் தேவைக்காக மாற்றியமைக்கப்பட்டு விட்டது. 19வது அரசியலமைப்பின் 42ஆம் அத்தியாயம் இவ்விடயங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவினை பெறுபவரை ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும். இதனை 42ஆம் அத்தியாயத்தின் 4ஆம் பிரிவு குறிப்பிடுகின்றது. பதவி நீக்கம் தொடர்பில் 46(2) பிரிவு குறிப்பிடுகின்றது அதாவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை செயற்படும் வரையில் பிரதமர் ஒருவர் பதவி வகிக்க முடியும், பதவி காலத்தில் அவரே தன் விருப்பின் பெயரில் பதவி விலகலாம், அல்லது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டு வந்து அதனை நிறைவேற்றும் பட்சத்தில் பதவி விலக முடியும் என்றே 19வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்விடத்திலும் பிரதமராக நியமித்தவரே பதவி நீக்கம் செய்யலாம் என்று குறிப்பிடுவில்லை. 18ஆம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கருத்திற் கொண்டு வாதிடுபவர்கள் சுயநினைவு அற்றவர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

இந்நிலையில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரமோ, இடைப்பட்ட காலத்தில் அமைச்சரவையினை கலைக்கும் அதிகாரமோ ஜனாதிபதிக்கு கிடையாது. தற்போது இடம்பெற்ற விடயங்கள் இடம்பெற கூடாது என்பதற்காகவே பாராளுமன்றம் அதிக அதிகாரமுடையதாக மாற்றியமைக்கப்பட்டது.” என்றுள்ளார்.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.