இலங்கை

ஜனநாயக விழுமியங்களையும், அரசியலமைப்பு ஏற்பாடுகளையும் மதிக்குமாறும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டனியோ கட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கவலையுடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அவதானித்து வருதாக, அவரின் பேச்சாளர்
ஸ்டீபனே துஜாரிக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரையும் பொறுமையை கடைப்பிடிக்குமாறும், உருவாகிவரும் நிலவரத்திற்கு அமைதி தீர்வொன்றை காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் ஐ.நா. செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கொரோனா நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்தத் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியா அசாமில் பருவமழை பெய்ததையடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டத்தில் 59பேர் வரை பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று வேகத்தால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

இத்தாலியில் தற்போது பயணம் மேற்கொள்ளும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய பல நடைமுறைகள், விதிகள் உள்ளன. இத்தாலியின் கொரோனா வைரஸ் தொற்றுக்காக மேற்கொண்டிருந்த இறுக்கமான நடைமுறை விதிகள் கண்டிப்பானவை.