இலங்கை
Typography

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் பணம் கொடுத்து வாங்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் ஒன்றை விரைவில் அமைப்பதற்காக மக்களை சந்திக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் சிறு கால அரசாங்கம் மட்டுமே.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS