இலங்கை
Typography

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிடிவாதம் பிடித்து வந்தார்.’ என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவும் நடவடிக்கை எடுப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலிற்கு தனது டுவிட்டர் செய்தியில் மங்கள சமரவீர இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“2015 முதல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு மைத்திரிபால சிறிசேன பிடிவாதமாக மறுத்து வந்தார். தற்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை அரசியல் சந்தர்ப்பவாத நடவடிக்கை, கபடநாடகம். உண்மையிலேயே, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் இந்த அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டஒரேயொரு நன்மை அதுவாகும்.” என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்