இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளதாவது, “பதவிகள், சலுகைகள் மற்றும் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மைத்திரி- மகிந்தவினால் முன்னெடுக்கப்படும் இந்த சதித் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

முதலில் இந்த அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே ஜே.வி.பி. செயற்பட வேண்டியுள்ளது. இந்த சதித் திட்டம் பாராளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் தோற்கடிக்கப்பட வேண்டும். எனவே, நாளை ஜே.வி.பி. நான்கு முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தவுள்ளது.

பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ள நிலையில் பாராளுமன்றத்தை உடனடியாக சபாநாயகர் கூட்ட வேண்டும். சபாநாயகர் அண்மையில் வெளியிட்ட காட்டமான அறிக்கையை ஜே.வி.பி. வரவேற்கிறது.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்