இலங்கை

“எனக்கு அதிக நெருக்கடி வழங்கினால், நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டு ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி, பொலநறுவை சென்று விவசாயம் செய்வேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாட்டுக்கு உரையாற்றிவிட்டு, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, பொலநறுவைக்கு சென்று அங்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது, உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.” என்றுள்ளது.