இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கை மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு கடந்த 04ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்றது. அந்த மாநாடு குறித்த சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதாவது கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாடு குறித்து இன்று வரையில் எனக்கு எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறவில்லை.

கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களுக்கு மாநாடு குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை சுதந்திர கட்சியின கம்பஹா மாவாட்ட செயளாலர் லசந்த அழகியவண்ண வழங்கியுள்ளார்.

சுதந்திர கட்சியிலிருந்து என்னை தொடர்ந்தும் ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை சம்மேளனத்திற்கு அழைப்படாமை ஊடாக வெளிப்படுகின்றது. எனவே தான் செவ்வாய்கிழமை இடம்பெற்ற சுதந்திர கட்சி சம்மேளனத்தை தவிர்த்துக் கொண்டேன்.” என்றுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.