இலங்கை

‘எங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்குப் பயந்து நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம். எமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நீதிமன்றங்களில் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்.’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “என்னை அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காக தேவையான வழக்குகளைத் தாக்கல் செய்து, தற்போது அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் ஐ.தே.க எடுத்துள்ளது.

இன்று ஜனாதிபதி இருக்கின்றார். செயலாளர் இருக்கின்றார். அந்த அரசாங்கத்தில் நாம் சேவை செய்கின்றோம். அத்துடன் வழக்கின் தீர்ப்பு குறித்து எதுவும் சொல்ல முடியாது. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் எதிர்க்கின்றோம்.

உலகில் எங்குமே நிகழாத சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. அதாவது உலகில் முதற்தடவையாக நீதிமன்றத்தில் இவ்வாறானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் அரசாங்க பணியாளர்கள் அதனால் இந்தத் தீர்ப்பு தவறு என்ற எண்ணத்திலேயே நாம் இருக்கின்றோம்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

ஒன்பதாவது பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடும் என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 8 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான புதிய கொரோனா வழிமுறைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.