இலங்கை

நாட்டின் எதிர்காலம், ஜனநாயகம் உள்ளிட்டவற்றைக் காப்பதற்காக அரசியல் சதிகாரர்களுக்கு எதிராக மக்கள் அனைவரும் போராட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு முரணான செயற்பாட்டினை எதிர்த்து 'நீதிக்கான போராட்டம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் 13ஆம் திகதி மக்களை அணித்திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையிலேயே, அவிசாவளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“அரசியலமைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி சட்டதிட்டங்களுக்கமைய நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேவை எழுந்துள்ளது. அரசியல் அமைப்பினை மறந்து தனது தனிப்பட்ட எண்ணத்தை நாட்டில் நிலைநாட்ட துணிந்தவர்களுக்கு மக்களின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.