இலங்கை

“நாட்டில் நீடிக்கும் அரசியல் குழப்பநிலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நடுநிலை வகிக்குமாறு சிலர் கூறுகிறார்கள். ஆனால், தற்போது நடுநிலை வகிப்பதென்பது மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாகவே அமையும்.” என்று புளொட் அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சித்தார்த்தன் மேலும் கூறியுள்ளதாவத, “தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினை தெரிவித்தோம்.

பொதுத் தேர்தல் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றினால் இன்று காணப்படும் குழப்பநிலை மேலும் அதிகரிக்கும். இரண்டு தேசிய கட்சிகளும் தங்களின் ஆட்சியிலேயே தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்றனர். இதில் சிறுபான்மையினரின் நலன்கள் தொடர்பாக அவர்கள் எதுவும் சிந்திக்கப்போவதில்லை.

அரசியல் அமைப்பு மீறப்பட்டதாக சர்வதேசத்தில் இருக்கக் கூடிய அரசியல் நிபுணர்கள் மற்றும் உள்ளுரில் இருக்க கூடிய நிபுணர்கள் அரசியல் அமைப்பு மீறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்

ஆனால், நீதிமன்றம் எப்படி தீர்ப்பு வழங்கும் என தெரியாது. இந்த நிலையில் ஒரு அதிகாரபூர்வமற்ற அல்லது சட்டவாக்கத்துக்குட்படாது தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் அந்த அரசாங்கத்திற்பட்டு தேர்தல் நடாத்தக் கூடாது என்பது ரணிலின் நிலைப்பாடு.

மீண்டும் தேர்தல் நடைபெற்று அப்போது ஐக்கய தேசிய முன்னணிதான் அரசாங்கம் வருகின்றது. அப்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஏற்க மறுத்தால் என்ன நடக்கும்?

தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயப்பிடவில்லை. அதேவேளை இந்த மூன்றரை வருடத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை செய்யாவிட்டாலும், சிலவற்றை செய்திருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது, அரசியல் அமைப்பு போய்கொண்டிருக்கின்றது, அது இறுதி வரைவு வருகின்றபோது தான் அது சரியா பிழையா என தெரியும்.

அதுவரை கருத்தாடல் நிலையில் தான் அரசியல் சீர்திருத்தம் நடந்துகொண்டிருக்கின்றது. எனவே கருத்தாடலை வைத்துக் கொண்டு அரசியல் யாப்பை பிழை என தெரிவிக்க முடியாது எனவே இறுதி வடிவம் வரவேண்டும். தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்லாத ஒரு தீர்வு வருமாயின் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக இருக்காது. ஆனால் 70 வருடங்களாக இந்த முயற்சி நடந்து கொண்டு வருகின்றது.

மஹிந்த யுத்தத்தை வென்றபடியால் அவர் சொல்வதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வார் என்ற அபிப்பிராயம் பொதுவாக இருக்கின்றது. ஆனால் அவர் இதை செய்வாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.” என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.