இலங்கை

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய அமைப்புக்களை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. 

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பேரவையின் இன்றைய கூட்டத்தின் போது பேரவையில் இருந்து சில கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென ஒரு கட்சி விடுத்த கோரிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு சுமூகமான முடிவிற்கு நாங்கள் வந்துள்ளோம். இதனடிப்படையில் பேரவைக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் இத்துடன் நீங்குமென்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பேரவையில் இருந்து இரண்டு கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென ஒரு கட்சி கோரியிருந்த நிலையில், அந்த இரு கட்சிகளதும் விளக்கமும் கோரப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்றைக்கு இது சம்மந்தமாக இரு தரப்பாரும் தங்களுடைய விளக்கத்தை அறியத் தந்ததால், அதனை ஏற்றுக் கொள்வதென ஒரு முடிவிற்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.”என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.