இலங்கை

பாராளுமன்றத்தினைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு வரலாற்று ரீதியானதாக இருக்கும் என்று இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரான ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார். 

நீதிமன்ற தீர்ப்பு இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையிலேயே அவர் தன்னுடைய டுவிட்டர் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு முன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன். இந்த தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் தீர்ப்பாக அமையும். இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர்கள் பல தலைமுறைக்கு இந்த தீர்ப்பு குறித்து கற்பார்கள்.” என்று பிரித்தானியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.