இலங்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பாராளுமன்றத்தைக் காலால் உதைத்துவிட்டு தமக்கான ஆட்சியினை அமைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.” என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “பாராளுமன்றத்தை மதிக்காமல் பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் பாராளுமன்றத்தை கலைத்து, பிரதமரை மாற்றியமைத்து நாட்டின் ஆட்சி பலத்தை கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு பாராளுமன்றத்தை புறக்கணித்து ஆட்சியை கைப்பற்ற மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கே முழுநாடும் எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றதே தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் இல்லை.

பாராளுமன்றம் இல்லாமல் ஒருநாளும் ஆட்சி புரிய முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவை இல்லை என்றதாலேயே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல்களில் அவருக்கு எதிர்த்து வாக்குபதிவு செய்திருந்தனர்.

அவ்வாறு தேசிய தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் தனது வாக்கு பலத்தை பிரயோகித்துள்ள நிலையில் மக்களின் அபிப்பிராயத்தை நிராகரிக்க முடியாது. அவ்வாறே மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் எதிர்பார்ப்பார்களானால், எதிர்வரும் தேர்தல்களில் அவருக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க முடியும். ஆனால் அவ்வாறானவொரு தீர்மானத்திற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையும் மக்களே வெளிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் எதற்காக இவ்வாறு இந்த பதவியினை மஹிந்த பெற்றுகொண்டார் என்றும் எதற்கு இந்த பேராசை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் நீதிமன்ற தீர்ப்புகள் நாளை அல்லது நாளை மறுதினம் அல்லது வெள்ளிக்கிழமையே கிடைக்கப்பெரும். இதனால் நீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்ப்பெற்றவுடன் அடுத்த வாரத்தில் பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்.

நீதிமன்ற தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னர் போராட்டம் மேற்கொள்வதால் எந்தவித பயனும் கிடைக்க போவதில்லை. எனவே அடுத்த வாரம் நீதிக்கான மக்கள் போராட்டம் மேற்கொள்ளப்படும்.” என்றுள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.