இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றஞ்சாட்டியுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழீழ இலக்கு அடைய முடியாமல் போய்விட்டது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின்யின் மீதும், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் மீதும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. மறைமுகமான சமஷ்டி யாப்பின் மூலம் தமிழீழத்தை அடைந்துக்கொள்வதற்காகவே கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.” என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.