இலங்கை

ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வெளியிடும் பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கக் கோரும் வகையிலான நம்பிக்கைப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

அதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட 103 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கூட்டமைப்பினரிடம் கோரியுள்ளார்.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.