இலங்கை
Typography

‘ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவித இரகசிய உடன்படிக்கையையும் செய்து கொள்ளவில்லை’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டமைப்புடன், ஐ.தே.க இரகசிய உடன்பாடு செய்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் கூட்டமைப்புடன் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டியது எமது தார்மீக கடமை. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிந்த உடனேயே வடக்கு -கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டு காலத்தில் எம்மாலும் அதனை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.

வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது எமது கடமை. அதற்காக கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை. எமக்கான கடமை என்ற ரீதியில் அதனை நிறைவேற்றுவோம்.”என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்