இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பாராளுமன்றம் நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னரேயே கலைக்கப்பட முடியும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்தக் காலத்துக்கு முன்னர், ஜனாதிபதியால் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது என்று உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிடும் விசேட வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு எதிரான தொடுக்கப்பட்ட வழக்கிலேயே மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்