இலங்கை
Typography

“தொடர்ந்தும் பொய்யான விடயங்களைப் பரப்பி வந்தால், நாமல் ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் எம்முடன் கலந்துரையாட முன்வந்த விடயங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்படிக்கை செய்துக்கொண்டுள்ளதாக தொடர்ந்தும் பொய்க் குற்றச்சாட்டுக்களை பொதுஜன பெரமுன முன்வைத்து வருகின்றது. அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது எவ்வித உடன்படிக்கைக்கு அமைய இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கூட்டமைப்பு எடுத்த முடிவை நகைச்சுவையாக்கி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்