இலங்கை
Typography

சட்டரீதியான அரசாங்கமொன்றை உருவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாகும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “நீதிமன்றத்தால் பாராளுமன்றத்தை, (சட்டவாக்கத்தை) உறுதிப்படுத்தியமைக்கு நாம் பாராட்டுத் தெரிவிக்கின்றோம். சட்டரீதியான அரசொன்றை ஒருவாக்குவதே எமது அடுத்த கட்ட நடவடிக்கையாகும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எமக்குக் கிடைத்துள்ளது. அதற்கிணங்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்க மொன்றை உருவாக்குவோம். மக்களது எதிர்பார்ப்பு மற்றும் பிரச்சினைகளை நிறைவேற்றுவோம். நாம் தெரிவித்தது போல் உண்மை வெற்றி பெற்றுள்ளது 17ஆம் திகதி நாம் எமது கூட்டத்தை கூட்டுவோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS