இலங்கை
Typography

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. 

தொடர்ந்து வந்த அரசியல் நெருக்கடி இன்று அல்லது திங்கட்கிழமைக்குள் முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். அரசாங்கத்தில் இணையும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிகின்றது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்