இலங்கை

'பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்தீரமான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். அதற்காகவே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளேன்’ என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறிய விஜித் விஜயமுனி சொய்ஸா, தனது நிலைப்பாடு தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எமது கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனும் கட்சி போசகர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் இணைந்து செயப்படுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ் தற்போது வேறு கட்சி ஒன்றில் உறுப்புரிமை பெற்றுக்கொண்டுள்ளதாக பத்திரிகைகளின் மூலம் அறிந்துகொண்டேன். என்றாலும் மஹிந்த ராஜபக்ஷவை சுற்றியுள்ள ஓநாய்களுடனும் நாய்களுடனும் இந்த பயணத்தை தொடரமுடியாது. சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் அநாதரவாக உள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டும்.” என்றுள்ளார்.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.