இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை புதிய அமைச்சரவை பதவியேற்றது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வடக்கு அபிவிருத்தி அமைச்சு கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சினை இதுவரை காலமும் டி.எம்.சுவாமிநாதன் வகித்திருந்தார். இதனிடையே, சரத் பொன்சேகா அமைச்சராக இன்று பதவியேற்கவில்லை.

பதவியேற்ற அமைச்சரவை விபரம்:

1.ரணில் விக்ரமசிங்க- தேசிய கொள்கை, பொருளாதார அபிவிருத்தி, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம்.
2. ஜோன் அமரதுங்க: சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரம்
3. காமினி ஜயவிக்ரம பெரேரா: பௌத்த சாசனம்
4. மங்கள சமரவீர: நிதி மற்றும் ஊடகம் 
5. லக்ஷ்மன் கிரியெல்ல: மலைநாட்டு மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி
6. ரவுப் ஹக்கீம்: நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்க்கல்வி
7. திலக் மாரப்பன: வெளிநாட்டலுவல்கள்
8. ராஜித சேனாரத்ன: சுகாதாரம்
9. ரவி கருணாநாயக்க- சக்தி மற்றும் எரிசக்தி வியாபார அபிவிருத்தி அமைச்சர்
10. வஜிர அபேவரத்ன: உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள்.
11. ரிஷாத் பதியூதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.
12. சம்பிக்க ரணவக்க: மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி
13. நவீன் திஸாநாயக்க: பெருந்தோட்ட கைத்தொழில்
14. பி.ஹரிசன்: கைத்தொழில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, நீர்நிலைகள் மற்றும் மீன்பிடி நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.
15. கபீர் ஹாசிம்: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி.
16. ரஞ்சித் மத்தும பண்டார: பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
17. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
18. சஜித் பிரேமதாஸ: வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார நடவடிக்கை
19. அர்ஜுன ரணதுங்க: போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்.
20. பழனி திகாம்பரம்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி
21. சந்திராணி பண்டார: பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி.
22. தலதா அத்துகோரல: நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
23. அகில விராஜ் காரியவசம்: கல்வி
24. அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம்: தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய நடவடிக்கை
25. சாகால ரத்னாயக்க: துறைமுக, கடற்றொழில் நடவடிக்கை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை
26. ஹரின் பெர்ணான்டோ: தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
27. மனோ கணேசன்: தேசிய ஒருமைப்பாடு, அரச மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் ஹிந்து சமய நடவடிக்கை
28. தயா கமகே: தொழிலாளர், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மற்றும் சமூக மேம்பாடு.
29. மலிக் சமரவிக்ரம: அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பட மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.