இலங்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட அமைச்சரவை பட்டியலை நிராகரித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைளை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது. 

ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு எப்படியாவது அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புது வியூகம் அமைத்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான பிரேரணையினை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி நிராகரித்தாலும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.