இலங்கை

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இடைக்கால கணக்கறிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஸ்திரத்தன்மை குலையாதிருக்க இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படும் இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப்பான செயற்பாடுகள் காரணமாக நாட்டில் ஸ்திரத்தன்மை சீர்குலைந்ததாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தொடர்ந்தும் அந்த நிலை நீடிப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தது நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தவிர்ப்பதற்காகவாகும். என்னைப் பொறுத்த வரையில் நான் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன். ஐ.தே.க. எப்போதும் கட்சி அரசியலுக்கே முன்னுரிமை கொடுக்கின்றது. நாட்டைக் காப்பாற்றிய தலைவன் என்ற அடிப்படையில் எம்மால் அப்படிச் செயற்பட முடியாது .

தேவையென்று கருதியிருந்தால் உயர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஜனவரி 18ஆம் திகதி முடிவுறும் வரை பிரதமர் பதவியில் தன்னால் இருந்திருக்க முடியும். என்னிடம் அவ்வாறான குறுகிய கொள்கை எதுவும் கிடையாது.” என்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.