இலங்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சூழ்ச்சியில் நான் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தின் இன்றைய (வெள்ளிக்கிழமை) அமர்வில் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமைகளை மீறுகின்றார். ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் என்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது.

ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் சரத் பொன்சேகா தொடர்பில்லை. அவ்வாறான முறைப்பாடுகளும் இல்லை. விசாரணைகளில் அம்பலமாகவும் இல்லை என, குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் (சி.ஐ.டி) பொலிஸ் மா அதிபரும், சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர். இவ்வாறான நிலையிலேயே, நாமல் குமார என்பவர், என்மீது போலியான குற்றச்சாட்டை முன்வைத்துகொண்டிருக்கின்றார்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.