இலங்கை

கறுப்பு இரவுச் சூழ்ச்சியினாலேயே, 2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்க முடியாமல் போன சந்தப்பங்கள் பல உள்ளன. 1931, 1995, 2001 மற்றும் 2010ஆம் ஆண்டுகளிலும் இடைக்கால கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாம் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை தயாரித்து கொண்டிருந்த போதுதான், கறுப்பு இரவுச் சூழ்ச்சியொன்று ஏற்படுத்தப்பட்டது.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.