இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

அத்தோடு, தனிநபருடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2019ஆம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். நாட்டுக்கு வெளியில் செல்லும் நிதியைக் குறைத்து, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் நிதியை அதிகரிப்பதனூடாக, ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியும். இலங்கை மத்திய வங்கி பிணைமுறிகள் கொடுக்கல் வாங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடியைத் தொடர்ந்தே, இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்து வருகின்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அமைச்சர் மலிக் சமரவிக்ரம மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.” என்றுள்ளார்.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.