இலங்கை

‘புதிய அரசியலமைப்பில் சமஷ்டி உள்ளடக்கப்பட்டுள்ளது போன்ற பொய்யான பல்வேறு பிரச்சாரங்களை இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “எமது கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினர்களுடன் சமகால அரசியல் நிலமை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, எதிர்வரும் மார்ச் மாதம் இடம் பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்பாக புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்பட இருக்கின்றது என்ற செய்தியை கொண்டு வர இருக்கின்றார்.

எங்களைப் பொறுத்த வரையில் 2019 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கியமான தேர்தல்கள் இடம் பெற இருக்கின்றன. மாகாண சபைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில், கடந்த மூன்றரை வருடங்களாக (3.12) இந்த புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படுகின்ற இந்த புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்டி உள்ளடக்கப்பட்டுள்ளது போன்ற இந்த பொய்யான பல்வேறு பிரச்சாரங்கள் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளனர்.

உண்மையிலேயே புதிய அரசியல் அமைப்பு என்பது ஜனாதிபதியும், பிரதமரும் திரும்பத்திரும்ப ஒரு செய்தியை சொல்லுகின்றார்கள். இது ஒரு ஒற்றையாட்சியை உள்ளடக்கியதாக புதிய அரசியல் யாப்பு இருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை (28) கூட மகாநாயக்க தேரரை பிரதமர் சந்தித்த போது புதிய அரசியல் அமைப்பிற்கு பௌத்த மதத்திற்குத்தான் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

அதே போல் ஒற்றையாட்சியையே இந்த நாடு கொண்டிருக்கின்றது என்ற செய்தியை கூறுகின்றதன் பிற்பாடு , இந்த புதிய அரசியல் அமைப்பு எதிர் வருகின்ற சுதந்திர தினத்திற்கு முன்பாக கொண்டு வரப்படுகின்றது என்கின்ற செய்தியானது மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினை மீண்டும் இவர்களும், தற்போதைய அரசும் சேர்ந்து ஏமாற்றி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த விதமான உரிமைகளையும் பெற்றக்கொள்ள முடியாது என்கின்ற நிலைக்கே இவர்கள் இட்டுச் செல்கின்றார்கள் என்கின்ற நிலையையே நான் கூற விரும்புகின்றேன்.” என்றுள்ளார்.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.