இலங்கை

“தற்போதைய அரசாங்கம் அடிப்படைவாதத்திற்கு எதிரானது. ஆகவே, அடிப்படைவாதிகளுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்காது.” என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

கண்டி மற்றும் மாவனல்லைப் பிரதேசங்களில் இடம்பெற்ற இனவாதத்தைக் தூண்டும் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய மேற்படி பாதிப்புக்குள்ளான விகாரைகளுக்கு நேரில் சென்ற அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சேதங்களை நேரில் பார்வையிட்டு உரிய நட்டஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அனைத்து மதங்களிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர். எனினும் அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் அடிப்படைவாதத்தை தோல்வியுறச் செய்வதற்கும் அனைத்து மதங்களினதும் முக்கியஸ்தர்கள் எம்மோடு இணைந்துள்ளனர். அது மகிழ்ச்சியான விடயமாகும்.

கண்டி, மாவனெல்லை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஒளிவுமறைவு எதுவும் கிடையாது. அடிப்படைவாதத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதை அரசாங்கம் என்ற வகையில் நாம் நடைமுறைப்படுத்துவோம். ” என்றுள்ளார்.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.