இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும், அவரது ஆதரவளார்களையும் அனுமதிக்கவேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தாய்லாந்திற்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தனது தலைமைத்துவத்திற்கு எதிராக சந்திரிகா குமாரதுங்க குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியை ஏற்படுத்தும் மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து சுதந்திரக் கட்சிக்குள்அதிருப்தி எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.