இலங்கை

“ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ‘ஒருமித்த நாடு’ என்றே புதிய அரசியலமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதி வரைபிலும் அவ்வாறே இடம்பெறும் என்று நம்புகின்றோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

“அரசியலமைப்பில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல் மூன்று மொழிகளிலும் இருக்கும். அதில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது. ஏக்கிய ராஜ்ஜியவுக்கு தமிழில் ஒருமித்த நாடு என்ற பதத்தை இணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சபை முதல்வருமான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது, “புதிய அரசியலமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் இது தொடர்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒற்றையாட்சி என்ற குழப்பம் இருந்தது. ஆனால், இடைக்கால அறிக்கையில் ஒருமித்த நாடு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைவிலும் அதுதான் வரும் என்று நம்புகின்றேன். இந்தச் சொல் தொடர்பில் சட்டச் சிக்கல் வந்தாலும், இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு ஒருமித்த நாடு என்ற சொல்லே மேலோங்கும்.

இந்தச் சொல்லை வைத்து தமிழ் மக்களிலும், சிங்கள மக்களிலும் சில தனி நபர்கள் சுயலாப அரசியல் செய்கின்றார்கள். இந்தச் சொல் நாட்டின் மூன்று இனமக்களின் அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்ட சொல். நல்லிணக்கத்துக்கு மூல காரணமாக அமையும் சொல். அப்படிப்பட்ட முக்கியமான சொல்லை வைத்துக் கொண்டு சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபடக் கூடாது. இந்தச் சில்லறை வேலைகளுக்கு சில சிங்கள, தமிழ் ஊடகங்களுக்கும் துணைபோவதுதான் கவலைக்குரியது.

இந்தச் சொல்லாடல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில், ஏக்கிய ராஜ்ஜியவுக்கு ஒருமித்த நாடு என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்திருந்தார்.”என்றுள்ளார்.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.