இலங்கை

‘தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை சீரமைப்போம்.’ என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“எம்முடைய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற வருடமாக இவ்வருடம் அமையவுள்ளது. இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதுடன், நாட்டை சீரமைக்கும் பொறுப்பும் எமக்குள்ளது. கட்சியென்ற வகையில் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் விட அதிகளவில் உழைக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனைய அனைத்துக் கட்சிகளையும் விட மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவையினை எம்மிடமிருந்து இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை வழங்குவதற்கான இயலுமை எம்மிடம் உள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019 ஆம் ஆண்டுக்கான கட்சியின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கட்சி அலுவலகத்தில் பஷில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“எமது கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடன், அவரது வழிகாட்டலின் கீழ் செயற்பட்டு வருகின்றது. இவ்வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுன என்ற கட்சியின் தலைமைத்துவத்தின் ஊடாக வெற்றி பெறும் வாய்ப்பு எமக்குள்ளது. அதற்குரிய சக்தியும், தைரியமும் எம்மிடம் உள்ளது.” என்றும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.